Loading...
Treasure face
Innum Konjam Neram
  • 147,664,607
Lyrics

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? நில்லு பொண்ணே

இன்னும் பேச கூட தொடங்கல, என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறையல

இப்போ என்னவிட்டு போகாதே, என்னவிட்டு போகாத

இன்னும் பேச கூட தொடங்கல, என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறையல

இப்போ மழ போல நீ வந்தா கடல் போல நான் நிறைவேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? நில்லு பொண்ணே

♪

இதுவரைக்கும் தனியாக எம்மனச அலையவிட்டு

அலையவிட்டு, அலையவிட்டாயே

எதிர்பாரா நேரத்துல இதயத்துல வலையவிட்டு

வலையவிட்டு, வலையவிட்டாயே

நீ வந்து, வந்து போயேன் அந்த அலைகள போல

வந்தா, உன் கையில மாட்டிக்குவேன் வளையல போல

உன் கண்ணுக்கேத்த அழகா வரேன், காத்திருடா கொஞ்சம்

ஒன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னு கொஞ்ச காலம் பொருத்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? சொல்லு கண்ணே

இன்னு கொஞ்ச காலம் பொருத்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? சொல்லு கண்ணே

♪

கடல் மாதா ஆடையாக உயிரோடு

உனக்காக காத்திருப்பேன், காத்திருப்பேன்யா

என் கண்ணு ரெண்டும் மயங்குதே-மயங்குதே

உன்னிடம் சொல்லவே தயங்குதே

இந்த உப்பு காத்து இனிக்குது, உன்னையும் என்னையும் இழுக்குதே

உன்ன இழுக்க, என்ன இழுக்க என் மனசு நெறையுமே

இந்த மீன் உடம்பு வாசன என்ன நீ தொட்டதும் மணக்குதே

இந்த இரவெல்லாம் நீ பேசு, தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?

ஏன் அவசரம்? என்ன அவசரம்? நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கணும், என் புள்ளைக்கு தகப்பனாவணும்

அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடணும்

நீ சொந்தமாக கெடைக்கணும், நீ சொன்னதெல்லாம் நடக்கணும்

நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்

: / :